• Apr 16 2026

ஜனநாயகன் ரிலீஸுக்கு முன்பே ஆட்டத்தை தொடங்கிய விஜய் ரசிகர்கள்; பராசக்தி பேனர்கள் கிழிப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பேசு பொருளாக காணப்படுவது ஜனநாயகன் படமும்  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படமும்  பொங்கல் ரேஸில் ஒன்றாக ரிலீஸ் ஆக உள்ளது தான். 

ஏற்கனவே சிவகார்த்திகேயன் குட்டி தளபதியாக  உருவெடுத்துள்ளார்,  துப்பாக்கியை கொடுத்தவருக்கு  துரோகம் செய்துவிட்டார் என்று அவர் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் பராசக்தி படத்தின் ஆடியோ லாஞ்ஜில்  விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம்  பொங்கல் தினத்தன்று   வெளியாவதை  அறிந்து தான், விஜயின் மேனேஜருக்கு போன் பண்ணி அதைப் பற்றி  கதைத்ததாகவும் அதற்கு விஜய் அதில் ஒரு பிரச்சினையும் இல்லை தனக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும் இது தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு தான் முதலீட்டாளர்களுக்கு  பதில் சொல்ல முடியாமல் தான்  அந்தத் திகதியை தேர்வு செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.


இன்னொரு பக்கம்  சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் ஜனநாயகனுக்கு போட்டியாக ரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த நிலையில், மதுரை தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பராசக்தி படத்தின் பேனர்களை விஜய் ரசிகர்கள் கிழித்த சம்பவம்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

தமிழ்நாட்டின் சில திரையரங்குகளில் ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லரை  ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்தியுள்ளது. அதில் குறைந்த விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு விஜய் பட பாடல்,  ஆடல் என கொண்டாடப்பட்டுள்ளது.

இதன் போதே  மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில்  ஜனநாயகன் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு சென்ற விஜய் ரசிகர்கள் அங்கு தியேட்டரில் வைக்கப்பட்ட பராசக்தி படத்தின் பேனரை கிழித்தெறிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement