• Jun 12 2026

மறையாத சோகம்! நடிகர் பிரகாஷ் ராஜின் தாய் காலமானார்.. - இன்று இறுதி அஞ்சலி

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தை வென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் குடும்பத்தில் தற்போது சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அவரது தாயார் சுவர்ணலதா, 86 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.


இந்த துயரச் செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் மிகவும் பாதித்துள்ளது. பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்ற பிரகாஷ் ராஜ், தனது குடும்பத்துடன் மிகுந்த பாசப்பிணைப்பில் இருப்பவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். அவரது தாயாரின் மறைவு, அவருக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

குடும்பத்தினரின் தகவலின்படி, சுவர்ணலதா அவர்களின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் குடும்பத்தினரும், உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement