• May 15 2026

விஜய்யுடன் நடனமாடிய வீடியோவைப் பகிர்ந்து பீல் பண்ணும் த்ரிஷா.. வைரலான இன்ஸ்டா ஸ்டோரி

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த அவர், இன்றும் அதே வரவேற்புடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் மே 4ஆம் தேதி அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.


இந்த நிலையில், இன்று அவர் Instagram தளத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான “அப்படிப்போடு போடு” பாடலுக்கு சிறுவர், சிறுமியர்கள் மேடையில் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை தனது ஸ்டோரியில் பகிர்ந்துள்ள திரிஷா, தனது பழைய ஹிட் பாடல்கள் இன்றும் ரசிகர்களிடையே எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பதை நினைவூட்டியுள்ளார். ரசிகர்கள் இந்த பதிவை பெரிதும் ரசித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement