• Apr 16 2026

4 தமிழ் படங்கள்.. 'பிரேமலு’ மலையாள படம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருவதை அடுத்து இந்த வாரம் எந்தெந்த  ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை தற்போது பார்ப்போம்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் ‘பிரேமலு’ என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்து திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் இந்த வாரம் நான்கு தமிழ் படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ’பைரி’ திரைப்படம் அமேசான் ஓடிடியில், ’அதோமுகம்’  என்ற தமிழ் படம் டெண்ட்கொட்டா ஓடிடியில், ‘நந்திவர்மன்’ என்ற தமிழ் படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் நாளை வெளியாகிறது. அதேபோல் நாளை ஜியோ சினிமாவில் அசோக்குமார், ஐஸ்வர்யா லட்சும் நடித்த ’பொன் ஒன்று கண்டேன்’ என்ற திரைப்படம்  நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் தெலுங்கு படங்களான ‘காமி’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில்,  ‘ஓ பீம் புஷ்’அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement