• Apr 07 2026

மார்டன் லுக்கில் ரசிகர்களை சொக்கவைத்த நட்சத்திரா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

shali / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் தனது இயல்பான நடிப்பாலும், இனிமையான முகபாவங்களாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை நட்சத்திரா மீண்டும் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். தமிழும் சரஸ்வதியும் மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற குடும்ப உணர்வுகள் நிறைந்த தொடர்களில் நடித்ததன் மூலம், அவர் பலரது மனதில் தனி இடத்தைப் பெற்றார்.


இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அவரது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. அந்த படங்களில் நட்சத்திரா மிகவும் ஸ்டைலிஷாகவும், அதே சமயம் அழகை வெளிப்படுத்தும் வகையிலும் தோன்றுகிறார். பாரம்பரியத்தையும், நவீன ஸ்டைலையும் இணைக்கும் அவரது லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த புதிய போட்டோஷூட் வெளியானதும், ரசிகர்கள் பாராட்டுகளையும், கமெண்ட்ஸ்களையும் பொழிந்து வருகின்றனர்.

நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு ஸ்டைலிஷ் ஐகானாகவும் உருவெடுத்து வரும் நட்சத்திரா, எதிர்காலத்தில் மேலும் பல புதிய முயற்சிகளில் ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement