• Apr 16 2026

ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத்? என்னது சினிமால இருந்து விலகிவிட்டாரா? வைரலாகும் புகைப்படம்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் பரத். இன்னமும் தனக்கான நிலையான இடத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். இதனிடையில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் பரத்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பரத்திற்கு பாலாஜி சக்திவேலின் 'காதல்' மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இதனையடுத்து பல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.


இந்நிலையில் பரத்தின் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அதில் ஆட்டோ ஓட்டுனர் கெட்டப்பில் பரத் இருக்கிறார். இந்த புகைப்படத்தை சிலர் 'சினிமா வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஆட்டோ ஓட்டும் பரத்' என குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்களும் உண்மையென நம்பி ஷாக் ஆகியுள்ளனர்.ஆனால் உண்மையில் இது பரத்தின் அடுத்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்பது தெரிய வந்துள்ளது.


Advertisement

Advertisement