• Jun 12 2026

'கருப்பு' பட விழாவில் RJ பாலாஜி சொன்னது உண்மையா? வைரலாகும் பேட்டி.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருப்பு’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு ரசிகர்களிடமிருந்து ஓரளவு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. ட்ரெய்லரில் ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் சமூக கருத்துகள் கலந்த ஒரு வித்தியாசமான கதை சொல்லும் முயற்சி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை பற்றி பலருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருந்ததாகவும், அவரை யாரும் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டார். பல்வேறு விமர்சனங்களும், கேலிகளும் இருந்த போதிலும், அந்த நபர் தன்னம்பிக்கையுடன் தனது கனவுகளில் நிலைத்து நின்றார் என அவர் கூறினார்.

மேலும், அந்த நபர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்திருப்பதாகவும், அவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எனவும் குறிப்பிட்டது விழாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement