• May 29 2026

மீனவப் பொண்ணு இவ்வளவு ஸ்டைலிஷா.?சுபிக்ஷாவின் அட்டகாசமான டிரான்ஸ்ஃபர்மேஷன் க்ளிக்ஸ்

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிக் பாஸ் பிரபலம் சுபிக்ஷா. மீனவக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலிருந்தே தந்தையுடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் வாழ்க்கையை அனுபவித்தவர்.

தனது இயல்பான வாழ்க்கை தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். இவரை தற்போது ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகின்றனர்.

அந்த பிரபலத்தையே பயன்படுத்தி, சுபிக்ஷா பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வீட்டுக்குள் தனது நேர்த்தியான விளையாட்டின் மூலம் 90 நாட்களுக்கு மேலாக நிலைத்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக “Ticket To Finale” டாஸ்க்கில் அவரது செயல்பாடு மிகுந்த பாராட்டைப் பெற்றது.


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும், சுபிக்ஷா தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது அவர் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார். “அறிவு” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கடற்கரையில் எடுத்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின. அதனைத் தொடர்ந்து, தற்போது அழகிய பட்டுப்புடவையில் எடுத்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மீனவப் பெண்ணாக தனது பயணத்தை ஆரம்பித்து, பிக் பாஸ் மூலம் புகழ் பெற்று, தற்போது சினிமாவை நோக்கி பயணிக்கும் சுபிக்ஷாவின் வளர்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement