‘திரௌபதி’ திரைப்படம் வெளியான போது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக அரசியல் கருத்துகளை முன்வைத்த அந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி ‘திரௌபதி 2’ படத்தை உருவாக்கியுள்ளார்.

ரிச்சர்ட் ரிஷி மீண்டும் நாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். அவரது இசையில் அமைந்துள்ள பாடல்களில் ஒன்றாக வெளியானது பாடகி சின்மயி பாடிய “எம்கோனே” என்ற பாடல்.
பாடல் ப்ரோமோ வெளியானவுடன் சில நிமிடங்களிலேயே இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பாடல் வரிகள் பெண்களை இழிவாக சித்தரிக்கிறது என்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எழுப்பிய எதிர்ப்பிற்கு பதிலளித்த சின்மயி, “இந்த பாடலை பாடியிருப்பது குறித்து நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
சின்மயியின் மன்னிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, இயக்குநர் பேரரசு தனது கடுமையான பதிலை வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது, “பாடலுக்காக பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுங்கள். உங்கள் குரலை பாடலிலிருந்து நீக்கிவிடலாம்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது. சர்ச்சை தொடர்ந்த நிலையில், தற்போது இயக்குநர் பேரரசு மீண்டும் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். பாடகி சின்மயியின் கருத்தை அவர் தீவிரமாக விமர்சித்துள்ளார்.
அதாவது, “ஒரு பாடகி என்றால் கதையின் சூழல், வரிகள் பற்றி தெரிந்து பாடியிருக்க வேண்டும். அதனை விட்டுட்டு இந்த இயக்குநர் என்று தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன் என சின்மயி கூறியது கண்டிக்கத்தக்கது. இப்படி பேசுவது ஒட்டுமொத்த இயக்குநர்களையும் அவமானப்படுத்துவது போல் உள்ளது. அவர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் பேரரசு.
பேரரசின் இந்த கூற்றுகள் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளன. ஏற்கெனவே ‘திரௌபதி-2’ படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்க, இப்போது பேரரசின் கருத்தால் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.
Listen News!