• Apr 27 2025

சூர்யா பட தயாரிப்பாளர் வீட்டில் பணிப்பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதம்! துருவித்துருவி விசாரிக்கும் போலீசார்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் ஞானவேல் ராஜா. இவர் ஸ்டுடியோ க்ரீன்  நிறுவன தலைவராகவும் காணப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் சிங்கம், நான் மகான் அல்ல, பத்து தலை, பிரியாணி போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

தற்போது சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா சிறப்பு கெட்டப்பில் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே காணப்படுகிறது.


இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் திடீரென விபரீத முடிவு எடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தி. நகரில் உள்ள இவரது வீட்டில் மனைவி மற்றும் தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்கார பெண் திடீரென தனது உயிரை எடுப்பதற்கு துணிந்துள்ளார். இது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதே வேளை, தனது மனைவியின் நகைகள் காணாமல் போன நிலையில், தனது வீட்டு பணிப் பெண்ணிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள முனைந்த நிலையில் அவர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement