தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ரவி மோகன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஆன்மீக பாதையை நோக்கி திரும்பியுள்ளார்.
மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஊடகங்களை சந்தித்த அவர் பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில், சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்காக 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ள ரவி மோகன், நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து போகர் சன்னதி மற்றும் ஆனந்த விநாயகர் சன்னதியிலும் தரிசனம் செய்தார். ரவி மோகனை கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர், பல வருடங்களுக்கு பிறகு பழனி வந்திருப்பதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சின்ன வயதில் பழனி வந்திருந்தேன். அதற்கு பிறகு இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடன் வந்தவர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைத்தது. மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று தோன்றுகிறது. எல்லாரும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கிட்டேன் என கூறினார்.
அந்த நேரத்தில் பத்திரிகையாளர் ஒருவர் முதல்வர் விஜய் பற்றி கேள்வி எழுப்ப, கோவிலில் வைத்து என்ன இது என அவரை ஆப் பண்ணியுள்ளார் ரவி மோகன். தற்போது அவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.
Listen News!