• Jul 24 2025

இளையராஜா- வனிதா வழக்கில் புதிய திருப்பம்..! என்ட்ரி கொடுக்கும் Sony Music.!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் "இசைஞானி" என புகழப்படும் இளையராஜா மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் இடையே தற்போது உரிமை சிக்கலான விவகாரம் ஒன்று உயர் நீதிமன்றத்தை சென்றடைந்துள்ளது. இதற்கான காரணம்,1980களில் வெளியான புகழ்பெற்ற பாடல் "ராத்திரி சிவராத்திரி" தான்!


'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' எனும் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த "ராத்திரி சிவராத்திரி" பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த பாடல் தனது சொந்த உரிமை வாய்ந்த குரல் படைப்பு எனக் கூறி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இளையராஜா தரப்பில் தெரிவிக்கையில், "இந்த பாடல் எனது இசைப் பிரசாதத்திலிருந்து வந்தது. எனவே எந்த ஒரு படத்திலும் அதனை பயன்படுத்துவதற்கு எனது அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படக்குழு எந்த அனுமதியும் பெறாமல் இசையை பயன்படுத்தியுள்ளது." என்றனர்.


இதற்கு பதிலளித்த வனிதா விஜயகுமார் தரப்பில், "இளையராஜாவின் 4,000க்கும் மேற்பட்ட பாடல்களை Sony Music நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், அவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது." என நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நீதிபதிகள் Sony Music நிறுவனத்திடம் உண்மையாக அனுமதி உள்ளதா.? என்பதை விசாரிக்க, அவர்களையும் இவ்வழக்கில் மூன்றாம் தரப்பாக இணைக்க இன்று (ஜூலை 23) உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement