தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தனது ரசிகர்களை நேரில் சந்தித்து, பிரியாணி விருந்து அளித்து வருகிறார். இது சாதாரணமான ஒரு ரசிகர் சந்திப்பாக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் உத்தி எனவும் பார்க்கப்படுகிறது. இது அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைக்கான ஒரு அடித்தளமாகவே பலரும் கருதுகின்றனர்.
சமீப காலமாக, தமிழ்த் திரைத்துறையிலும், அரசியலிலும் முக்கியமான பலரின் நடவடிக்கைகளைப் போலவே, தனுஷும் விஜய்யின் பாணியில் செயல்படத் தொடங்கியுள்ளார். ரசிகர்களோடு நேரடி தொடர்பை வளர்த்து, அவர்களை ஒரு சீரான அமைப்பாக மாற்றுவதில் அவர் எடுத்த நடவடிக்கைகள், எதிர்கால அரசியல் திட்டத்திற்கான முன்அமைப்பாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
விஜய் தனது த.வெ.க கட்சி மூலம் சிறப்பாக மக்கள் நெருக்கத்தை உருவாக்கி, தற்போது பலருக்கும் மாடலாக மாறியுள்ளார். விஜய் போலவே, தனுஷும் தற்போது ரசிகர்கள் மன்றங்களை நேரில் சந்தித்து, அவர்களோடு கலந்துரையாடுகிறார். தனுஷின் இந்த அணுகுமுறை வெறும் ரசிகர்கள் சந்திப்பாக பார்க்கப்படாது அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
Listen News!