• Sep 03 2025

முதல் முறையாக கீர்த்தியுடன்இணையும் மிஷ்கின்...!புதிய படம் குறித்த அப்டேட்..!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வெற்றிகரமாக பரிணாமமடைந்தவர் மிஷ்கின். சமீப காலமாக பல முக்கியமான திரைப்படங்களில் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர், முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த புதிய திரைப்படத்தை பிரவீன் விஜய் இயக்குகிறார். மேலும், தயாரிப்புப்பணிகளை Z Studios மற்றும் Drumsticks Productions இணைந்து மேற்கொள்கின்றன. இசையமைப்பை சாம் இசையமைக்கவுள்ளார். இது வரைவே பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இவர், இப்படத்துக்கும் தனித்துவமான இசையை வழங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள், இப்போது அவர்களது நடிப்பை ஒரே திரையில் காணும் வாய்ப்பு கிடைக்க இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இரண்டு தனித்துவமான கலைஞர்கள் இணையும் இந்த கூட்டணி, தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement