தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள், மக்களிடம் நிழல் போல வாழும் பாத்திரங்கள், சமூக மற்றும் அரசியல் பின்னணியில் நிகழும் சிக்கல்கள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் செம்மையாக சொல்லும் இயக்குநர் வெற்றிமாறன். அவருடைய படங்கள் எப்போதுமே எதிர்பார்ப்பைத் தூண்டும். அந்த வரிசையில் தற்போது அவரது பேட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில், “பெண்கள் கதாபாத்திரங்களை எழுதுவதில் நான் சிறந்தவன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் என் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பெண் கதாபாத்திரம் வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா நடித்த சந்திரா தான். அந்த கதாபாத்திரம் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்குப் பின்னால் இன்னும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன,” என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு வரி ரசிகர்களிடையே "வடசென்னை 2" குறித்த கற்பனையை வெடிக்க வைத்துள்ளது. 2018-ல் வெளியான வடசென்னை திரைப்படம் வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் மூன்றாவது கூட்டணியாக அமைந்தது.
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுமே வலுவானவை. ஆனால், அந்த வரிசையில் ஆண்ட்ரியா நடித்த சந்திரா என்கிற பாத்திரம் தனித்துவமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!