• Sep 04 2025

ரோகிணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்த க்ரிஷ் .. முத்துவை தேடி வந்த ஆபத்து

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை  சீரியலின் இன்றைய எபிசோட்டில் , க்ரிஷ் ஸ்கூல் வளாகத்தில் இருந்து தப்பி ஓடி வருகின்றார். அவரை பின்தொடர்ந்து ஸ்கூல் வாட்ச்மேன்  விரட்டிச் செல்கின்றார். ஆனாலும் க்ரிஷ் அந்த வழியால் வந்த முத்துவின் காரில் ஏறி டிக்கிக்குள் ஒளிந்து கொள்கின்றார். 

முத்து தனது சவாரியை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்புகின்றார். திரும்பும் வழியில் மீனாவையும் பிக்கப் பண்ணிவிட்டு இடையில் வைத்து பழனியையும் அவருடைய மனைவியையும் ஏற்றுகின்றார், வரும் வழியில் ராபிக் போலீஸ் காரை நிறுத்தி செக் பண்ணுகின்றனர். ஆனாலும் அங்கிருந்த அருண் அவரை விடுமாறு சொல்லுகின்றார். 


இன்னொரு பக்கம் ஸ்கூலில் இருந்து க்ரிஷ் தப்பி சென்றுள்ளதாக  மகேஷுக்கு சொல்கின்றார்கள். இதனால் மகேஷ் ரோகிணிக்கு சொல்ல,  தான் துபாயில் இருந்து வந்ததாக சொல்லி இருக்கின்றேன். அதனால் என்னால் நேரடியாக ஸ்கூலுக்குப் போக முடியாது நீ ஒருக்கா போய் பாரு என்று மகேஷை அனுப்பி வைக்கின்றார். 

அங்கு சென்ற மகேஷ்  ஆசிரியரிடம்  பிள்ளையை ஒழுங்கா கவனிக்கவில்லையா என்று கோபமாக திட்டுகின்றார். அதன் பின் ரோகிணியும்  க்ரிஷை தேடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட் 



Advertisement

Advertisement