• Sep 03 2025

குழந்தையும் நாயும் ஒன்னுன்னு சொல்ல; என்ன நல்லா யூஸ் பண்ணிட்டாங்க.. பகீர் வீடியோ

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் தெரு நாய்கள் குறித்து நடைபெற்ற விவாதம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது..

குறித்த நிகழ்ச்சியில், தந்தை ஒருவர் தனது ஆறு வயது மகனை பள்ளிக்கு கூட்டிச் செல்லும் போது, குறுக்கே வந்த நாயை தவிர்க்க வண்டியை திருப்பியதால் விபத்தில் சிக்கி தன் கண்முன்னே மகன் உயிரிழந்ததாக கண்ணீர் மல்க பேசியிருந்தார். இது அனைவரையும் கதிகலங்க செய்தது.

அதே நேரத்தில்,  நாய்களுக்கு ஆதரவாக பேசிய அணியில் இருந்த சுசி வெங்கட், தானும் ஒரு விபத்தில் சிக்கியதாக கூறி அதை ஒரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் குறித்த பெண் சமூக வலைத்தள பக்கங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கடுமையாக  ட்ரோல் செய்யப்பட்ட சுசி வெங்கட், வீடியோ ஒன்றை வெளியிட்டு 'நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தது இதுதான்..' என உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். இது பலருக்கும்  அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

அதன்படி அவர் கூறுகையில் , நான் யார் என்று இப்போது சோஷியல் மீடியாவில் உள்ள எல்லோருக்கும் தெரிந்திருக்கும். என்னை மெண்டல் என்று சொல்கின்றீர்கள்... நான் ஒரு அம்மாவா என்று கேட்கின்றீர்கள்.. ஆனால் உள்ளே என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாது.. உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ப்ரோமோவில் நான் பேசியதாக காட்டப்பட்ட குழந்தையும் நாயும் ஒன்றா? என்று நான் கேட்டது மட்டும் தான்.


ஆனால் அங்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு முழுமையாக தெரியாது . நான் குழந்தையை நாயுடன் ஒப்பிட்டு பேசவில்லை . என்னை அங்கு முழுமையாக பேசவும் விடவில்லை .

நான் அங்கு கூற வந்த விடயம் இதுதான்..  விபத்தில் மகனை இழந்த தந்தையின் வலியை நான் உணர்ந்தேன்.. ஏனென்றால் எனக்கும்  விபத்து நடந்திருக்கின்றது.. 

நான் ஒரு நாள் பைக்கை ஓட்டி வரும்போது குழந்தை ஒன்று குறுக்கே ஓடிவந்து என்னுடைய கைப்பகுதியில் முட்டியது.. அப்போது நிலை தடுமாறி நானும் என் பின்னால் இருந்த என்னுடைய மகளும் கீழே விழுந்தோம்.. அந்த நேரத்தில் என்னுடைய உயிர் வெளியே போய் வந்தது.. அத்துடன் எனது குழந்தையை காப்பாற்றுவதா? அல்லது யாருடைய குழந்தை என்று தெரியாமல் விழுந்து கிடந்த அந்தக் குழந்தையை காப்பாற்றுவதா?  என்று எனக்கு தெரியவில்லை... 

ஆனால் அந்த நேரத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்னையும் எனது குழந்தையையும் எனது பைக்கில் மோதிய குழந்தையையும் காப்பாற்றினார்கள்..    கடவுள் புண்ணியத்தில் எனது குழந்தைக்கோ  அந்த குழந்தைக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை..  அந்தப் பரிதவிப்பை உணர்ந்து தான் அந்த வலியைப் பற்றி நான் பேச எடுத்தேன்.


ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கும் போதே 'உங்க பேச்சை நிறுத்துங்கள்' என்று கோபிநாத் கத்தினார் .. அதனாலே நான் பேசாமல் அமைதியாகினேன்..  

ஆனாலும் பிரேக் எடுக்கும் நேரத்தில்  அங்கு வந்த கோபிநாத் 'உங்களை பேசவிட்டு இருந்தால் இது ஒளிபரப்பாகும் போது பெரிய பிரச்சினையாகும். அதனால்தான் உங்களை பேசவிடாமல் தடுத்தேன்..' என்று சொன்னார். மேலும் அந்த காட்சி ஒளிபரப்பாகாது என்றும் சொன்னார்.  ஆனால் அதைத்தான் ப்ரோமோவாக முதலில்  வெளியிட்டார்கள். அதில் நான் கத்துவது மட்டுமே காட்டப்படுகிறது. அந்த ப்ரோமோவை மட்டுமே நீங்கள் பார்த்து பேசுகின்றீர்கள்.

எனினும் அந்த நிகழ்ச்சியில் குழந்தையை இழந்த அந்த தந்தை என்னை பார்த்து 'நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க.. ஆனா உங்கள பேச விடாம தடுத்துட்டாங்க.. உங்கள்ட ஏதோ ஒரு வலி இருந்தது..' என்று சொன்னார். அவர் என்னை புரிந்து கொண்டார். அது போதும் எனக்கு.. வேறு யாரும் புரிந்து கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.  தற்போது இவருடைய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

Advertisement

Advertisement