• Sep 04 2025

இந்தியாவிலேயே முதன் முறையாக ஃபெராரி காரை வாங்கிய பகத் பாசில்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் தனது  நடிப்பால்  ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பகத் பாசில்.  சினிமாவில்  நுழைந்த இவருக்கு ஆரம்பத்தில்  பல  எதிர்ப்புகளும் அவமானங்களும் கிடைத்தது. ஆனால் இன்று அத்தனையும் தாண்டி சினிமாத் துறையில்  நிலைத்து நிற்கும் நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். 

தமிழில் வெளியான விக்ரம்,  மாமன்னன், மாரீசன்   போன்ற படங்கள்  பகத் பாசிலின்  அபாரத்தனமான நடிப்பை வெளிக்காட்டியது. அதிலும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம்  இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதில் இவருடைய  கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலில் இருந்தாலும் ரசிகர்கள் பலரும்  கொண்டாடி மகிழ்ந்தனர். 

கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் மிரட்டுவதில் பகத் பாசில்  முக்கியத்துவம் வாய்ந்தவராக காணப்படுகிறார். இவர் தனக்கு கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். சரியான திரைக்கதைகளை தேர்ந்து  தனக்கே உரித்தான பாணியில்  நடித்து வருகின்றார். 


இந்த நிலையில்,  இந்தியாவிலேயே முதல் நபராக 13 கோடி மதிப்புள்ள புதிய வகை ஃபெராரி காரை பகத் பாசில் வாங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

மலையாள சினிமா துறையில் அடிக்கடி விலை உயர்ந்த கார்களை வாங்குபவர்களில் மிக முக்கியமான நடிகராக பகத் பாசில் காணப்படுகின்றார்.  அந்த அளவிற்கு திரைப்பட வாய்ப்புகளைப் போலவே சொகுசு கார்களும் இவர்களிடம் கொட்டி கிடக்கின்றன 

லம்போர்கினி , போர்ஷே , மெர்சிடிஸ்-பென்ஸ் , லேண்ட் ரோவர்  என உலகின் பல பிரபலமான பிராண்ட் கார்கள் நடிகர் ஃபகத் ஃபாசிலிடம் உள்ளன.  அந்த வரிசையில் தற்போது  பிராண்ட்-நியூ ஃபெராரி புரோசாங்குவே (Purosangue)  காரையும் வாங்கியுள்ளார்.

Advertisement

Advertisement