• Apr 16 2026

சொன்னதை செய்த சினேகா! அன்போடு வழங்கிய பெரிய சப்ரைஸ்! கண்ணீர் மழையில் ரசிகன்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் டிவில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில்  மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. நடனத்தில் சிறந்து விளங்க கூடிய நபர்களை தேடி பிடித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக உள்ளது. 


இந்த நிகழ்வில் நடிகை சினேகா, பாபா பாஸ்கர், சங்கீத்தா உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. 


டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக நடனம் ஆடி வரும் சுரேஷ் என்பவரை பார்த்து நடிகை சினேகா "ஒரு நாளைக்கு என்னோட வீட்டுக்கு வாங்க நான் என்கையாலே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன்" என்று கூறியிருந்தார். 


தற்போது அந்த நபருக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதமாக வீட்டுக்கு அன்போடு அழைத்து உணவு பரிமாறி தானே அவருக்கு ஊட்டி விட்டு மகிழ்த்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement