• Jun 07 2025

சிம்பு ஸ்கிரீன்ல மாஜிக் பண்ணுவார்.. ஹாலிவூட் சினிமா வேஸ்ட் பண்ணுறாங்க.! பிரபலம் ஓபன்டாக்!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ‘ரொமான்ஸ்’, ‘ஆக்சன்’ கொண்ட படங்களை இயக்கம் இயக்குநராக கௌதம் வாசுதேவ மேனன் காணப்படுகின்றார். அவரது படங்களின் உணர்வுபூர்வமான வசனங்கள், காதலின் ஆழத்தை சொல்வது போல, கதாநாயகர்களின் மனச்சாட்சியை வெளிப்படுத்தும் பாணி என்பன மூலம் தமிழ் சினிமாவில் தனி அடையாளமாக இருக்கின்றார்.


இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் அவர் சிலம்பரசன் STR குறித்துப் பேசியுள்ளார். STR குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் மனதைத் தொட்டுவிட்டன. அதன்போது, “ஸ்கிரிப்ட்ல என்ன எழுதினாலும், என்ன சொன்னாலும்... STR அதை மாஜிக் மாதிரி செய்வார். ஸ்கிரீன்ல பாக்குறப்போ அது அப்படியே ஒரு கம்பீர கலையாக தெரியும்.” என்கிறார் கெளதம் மேனன்.

இது அவரது சொந்த அனுபவம். ஏனெனில், சிம்புவுடன் அவர் இணைந்து உருவாக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிறைந்திருக்கும் காதல் காவியம். அந்தப்படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தின் மெல்லிய உணர்வுகளை STR ஏற்கனவே உணர்ந்திருந்தவாறு மிக நுணுக்கமாக படைத்திருந்தார். இதைத்தான் மீண்டும் கூறியுள்ளார் கெளதம்.


அதே பேட்டியில் அவர், “ஹாலிவூட் சினிமா சிலம்பரசனை வேஸ்ட் பண்ணுறாங்க. அவருடைய உண்மை ஆளுமை, அந்த 'local magic' என்பவற்றை எங்கயோ தொலைச்ச மாதிரி செய்யுறாங்க. எனக்கு தெரிஞ்சு அஸ்வந்த் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி  மற்றும் ராம்குமார் STRக்கு ஹிட் படங்களைக் கொடுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு.” எனவும் தெரிவித்துள்ளார்.

STR மிகவும் தனித்துவமான நடிகர். அவருடைய நடிப்பு, தோற்றம், பேச்சு எல்லாமே திரையில் மின்னும் தன்மை கொண்டவை. கெளதம் மேனன் போன்ற இயக்குநர்கள் அவரைப் பற்றி நேர்மையாக பேசுவதும், எதிர்கால இயக்குநர்களை STR-க்கு ஏற்றவாறு அறிவுறுத்துவதும், STRயின் வளர்ச்சிப் பாதையை காட்டுகின்றது.

Advertisement

Advertisement