• Apr 16 2026

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய சிம்பு பட இயக்குனர்.. தலைமறைவானதாக தகவல்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்திய மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ் திரை உலகில் சேர்ந்த பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் குடும்பத்தோடு தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னும் யார் யாரெல்லாம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சிம்பு , அனுஷ்கா ஷெட்டி நடித்த ’வானம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிரிஷ் என்பவர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியதால் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் இயக்குனர் கிரிஷ் கலந்து கொண்டதாகவும் அப்போது அந்த பார்ட்டியில்  இயக்குனர் கிரிஷ் போதை பொருள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இயக்குனர் கிரிஷை விசாரணைக்கு அழைத்ததாகவும் ஆனால் அவர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறை வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இயக்குனர் கிரிஷ் மும்பையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் மும்பைக்கு  தெலுங்கானா மாநிலம் போலீசார் மும்பை  சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் இயக்குனர் கிரிஷ் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தெரிகிறது.

திரை உலகை சேர்ந்த பலர் போதைப்பொருள் பயன்படுத்தியும் போதைப் பொருளை விற்பனை செய்தும் வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி திரை உலகிற்கு ஆரோக்கியமானது அல்ல என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement