• Apr 18 2026

இதுவரை இல்லாத பிரம்மாண்டமா.? லோகேஷ் – அல்லு அர்ஜுன் கூட்டணி குறித்து அதிர்ச்சித் தகவல்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகமே ஆச்சரியப்படும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் புதிய திரைப்படம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தைச் சுற்றியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


‘கைதி’, ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி, இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகின்றார். 

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, லோகேஷ் – அல்லு அர்ஜுன் கூட்டணி திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.800 கோடி என கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூ.400 கோடி சம்பளம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement