• May 28 2026

முதல்வர் விஜய்யை நம்பலையா RJ பாலாஜி.? ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கருத்து.! படுவைரல்

shali / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள RJ பாலாஜி, தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் குறித்து கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய் மீது மக்களிடம் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல பிரபலங்களும் அவருக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் RJ பாலாஜி அளித்த பேட்டியில், “திரைத்துறையை சேர்ந்த ஒருவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஜயின் வருகையால் அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மக்கள் தற்போது அவரை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையிலே நானும் இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளை புரிந்து செயல்படக்கூடிய தலைவராக விஜய் உருவெடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். RJ பாலாஜியின் இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள், “திரையுலகை சேர்ந்தவர்கள் கூட விஜய்யின் தலைமையை நம்புகிறார்கள்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement