• May 15 2026

மூத்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ணத் தயாரான ராஷ்மிகா! வாயை பிளந்த ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தின்  வெற்றியை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற ராஷ்மிகா, நடித்த படம் எல்லாம் ஹிட்டானது.

இதை தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம், புஷ்பா, டியர் காம்ரேட் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. 

அதன்பின் தமிழில் அவர் நடித்த முதல் படமான சுல்தானில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகர் விஜய்யுடன்  வாரிசு திரைப்படம் போன்றவற்றில் நடித்து இருந்தார். தற்போது தமிழில் ரெயின்போ என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.


பாலிவுட்டில் அமிதாப் பச்சனின் குட் பாய் படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு , ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படம் ஆகியவற்றில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளார் ராஷ்மிகா. 

இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். 28 வயதாகும் ராஷ்மிகா 58 வயதாகும் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement