• Apr 16 2026

இனிமேல் மாஸ் ஹீரோக்கள் படங்கள் வேண்டாம்.. புது ரூட்டை பிடிக்கும் ராஷ்மிகா மந்தனா..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாகி விட்டார் என்பதும் ’அனிமல்’ பட வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பாலிவுட்டில் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் பிரபல நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தனது ரூட்டை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் மட்டும் இனி நடிக்க இருப்பதாகவும் தனக்கு திருப்தியான கேரக்டர் கொடுத்தால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் திரையுலக வட்டாரத்தில் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவர் தற்போது ’தி கேர்ள் பிரண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் கதை நாயகியே அவர்தான் என்றும் அதேபோல் கதையை அவர் தேட தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட பாதியாக தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் சம்பளம் வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் இதுபோன்றுதான் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து அதன் பின் அது செட் ஆகாமல் மீண்டும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement