• Jun 14 2026

சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் அதிரடி மாற்றம்.? ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் குழப்பம்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 500 எபிசோடுகளை கடந்தும் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிரபல தொடர் ‘மூன்று முடிச்சு’. டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து டாப் 3 இடங்களில் இடம்பிடித்து வரும் இந்த தொடர், குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான தொடராக மாறியுள்ளது.

இந்த நிலையில், தொடரில் முக்கியமான மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையில் நந்தினியின் அப்பா மற்றும் தங்கை கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாற்றம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பேசுபொருளாகியுள்ளது. தொடரை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள், திடீர் கதாபாத்திர மாற்றத்தை ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதே நேரத்தில், கதைக்களத்தின் முன்னேற்றத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த எபிசோட்களில் புதிய நடிகர்களுடன் கதை எப்படி நகரும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மூன்று முடிச்சு’ தொடரில் இந்த மாற்றம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Advertisement

Advertisement