தமிழ் திரைத்துறையில் அரையாண்டு சாதனையை நிரூபித்து வரும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். இந்த அரிய MileStone-ஐ முன்னிட்டு, பலர் புகழ்ந்துவரும் நிலையில், பிரபல கவிஞர் வைரமுத்து அவருக்கு உருக்கமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமான "எக்ஸ்" தளத்தில்,வெளியிட்டுள்ள பதிவில் வைரமுத்து கூறுகிறார்: "50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம். ரஜினி, நீங்கள் ஓர் அபூர்வ ராகம். புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி. தொடரட்டும் உங்கள் தொழில், நிலைக்கட்டும் உங்கள் புகழ். 'இளமை இனிமேல் போகாது, முதுமை எனக்கு வாராது' என்று ‘முத்து’ படத்தில் எழுதிய முத்திரை வரியால் வாழ்த்துகிறேன்."
ரஜினிகாந்த் 1975-ஆம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் திரையில் கால்பதித்து, தொடர்ந்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்தின் திரையுலக சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வைரமுத்துவின் இந்த வரிகள், ரஜினியின் வெற்றிப் பயணத்துக்கு ஒரு இலக்கிய அஞ்சலி போலவும் அமைந்துள்ளது.
Listen News!