• May 16 2026

28 ஆண்டுகளுக்கு முந்தைய பூமிகா.. அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி ஒரு மாற்றமா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

“சில்லுனு ஒரு காதல்” படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகை பூமிகா இன்று வரை பலருக்கும் நினைவில் இருக்கும் ஒரு முகம். தற்போது 47 வயதாகும் அவர், முன்னணி கதாநாயகியாக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கிய பூமிகாவுக்கு அப்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. அவரது எளிமையான நடிப்பு மற்றும் இயல்பான அழகு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில், சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த சில பழைய புகைப்படங்களை பூமிகா தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களில் அவரது இளமை ததும்பும் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


இந்த அரிய புகைப்படங்கள் வெளியானதும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அந்த படங்களுக்கு லைக்குகள் மற்றும் ஹார்ட்டின்களை குவித்து,“எவர்க்ரீன் ஹீரோயின்” என்று  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பழைய நினைவுகளை மீட்டெடுத்த இந்தப் புகைப்படங்கள், பூமிகாவின் ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.


Advertisement

Advertisement