• May 16 2026

ரோகிணியை இஷ்டத்துக்கு போட்டுத் தாக்கும் முத்து.. கழுத்து வரை பிரச்சினையில் சிக்கிய பாலரம்மா..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், நாளைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே விஜயா ரோகினியின் அப்பா மலேசியா ஜெயிலில் இருக்கின்றார் என்பதை நம்பி, ரோகினியை வைத்து கடுமையாக பரிகாரம் செய்கிறார். ரோகிணி வேண்டாம் என்று கதறிய போதும் அவரை விட்டு வைக்காமல் கண்டிஷன் மேல கண்டிஷனாக போட்டுத் தாக்குகிறார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், எல்லாரும் ஒன்றாக சாப்பிட இருக்கும்போது முத்து ஸ்டாப் ஸ்டாப் என சொல்லுகிறார். எல்லாரும் பார்க்கும்போது பாலரம்மா ஏன் சாப்பிடுது? அது தான் அப்பாவுக்காண்டி விரதம் இருக்குல்ல என்று சொல்ல, ஆமால நானும் மறந்தே போயிட்டேன்னு விஜயாவும் சொல்லுகிறார்.


மேலும் ரோகிணியிடம் நீயும் வந்து உக்காந்துட்ட எந்திரி என சாப்பிட விடாமல் எழுப்புகிறார். 

அந்த நேரத்தில் ரோகினி முத்துவை பார்த்து முறைக்க, பாலரம்மா என்னைய பார்த்து ஏன் முறைக்கிற, உன்ட அப்பா ஜெயிலில் இருந்து வர வேணாமா? சாமி குத்தமாக கூடாது என்று தான் நான் சொன்னேன் என சொல்லுகிறார். இதுதான் நாளைய நாளுக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement