தமிழ் சினிமாவில் குழந்தை நடிகர்களின் பங்களிப்பு, காலம் காலமாக மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. சில நிமிடங்களே தோன்றினாலும், ஒரு கதையின் உணர்ச்சிப் புள்ளியை முழுமையாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் குழந்தை நடிகர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். அத்தகைய சூழலில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த குழந்தை நட்சத்திர விருது குறித்து, ‘கைதி’ திரைப்படத்தில் நடித்த சிறுமி மோனிகா தற்போது வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் பரவி வரும் அவரது கருத்துக்கள், தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிகா தனது கருத்தில், “தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்றவர்கள். அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாப்பாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர்.
அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால்.. அது நான் தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ / செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது. இந்த விஷயத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
இது யாரையும் நேரடியாக குற்றம் சாட்டும் வகையில் அல்ல, ஆனால் விருது வழங்கும் முறையில் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்ற கோணத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Listen News!