• Aug 12 2025

அவதூறு வழக்கில் சிக்கிய மீரா மிதுன்... டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதி..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை மற்றும் மாடல் மீரா மிதுன் மீதான அவதூறு புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவொன்றில்,பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசியதாகவும் அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது.


மேலும், அந்த வீடியோவில் அவரது நண்பரும் சேர்ந்திருந்தார் என்பதால், அவர்மீதும்  பொலிஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு , மீரா மிதுனை விசாரணைக்கு அழைக்க முயன்றபோது, அவர் தற்போது டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனால், உடனடி நடவடிக்கை எடுக்க இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.


“மீரா மிதுன் தற்போது சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துவரும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது,” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மீரா மிதுன் முன்னரும் சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது எழுந்துள்ள வழக்கு அவரது சமூக ஊடக செயல்பாடுகளின் விளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அவதூறு வழக்கின் வழிமுறை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எப்படி முன்னெடுக்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் விரைவில் தகவல் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement