• Aug 19 2025

சொந்தக் கடையில் ராணியால் அசிங்கப்பட்ட மனோஜ் .! ரொமான்ஸ் பண்ணிய முத்து ஜோடி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க  ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவின் அம்மாவுக்கு முத்து கொடுத்த  பணத்தை  பார்த்த அருண் நீங்க என்ன இன்சல்ட் பண்றீங்களா? என்று கேட்டு கோபமடைகிறார்.  இதனால்  சீதாவின் அம்மா முத்து கொடுத்த பணத்தை வாங்க மறுக்கின்றார். இதை பார்த்த அருண் கூடிய விரைவிலேயே உன்னையும் மறக்க வைப்பேன் என்று  சபதம் எடுத்து செல்கிறார். 

இதனால் பணத்தை முத்துவிடம் கொடுத்தால் அவர் கோபப்படுவார் என்று  மீனா ஜோசிக்கின்றார். ஆனாலும் நடந்தவற்றை முத்துவிடம் சொல்ல, அவர் எந்தவித கோபமும் கொள்ளவில்லை.  சீதாவை  நன்றாக பார்த்தாலே போதும் என்று சொல்ல, நீங்க ரொம்ப மாறிட்டீங்க என்று  முத்துவுக்கு முத்தம் கொடுக்கின்றார் மீனா. 

இதைத் தொடர்ந்து  ரெஸ்டாரண்டுக்கு வந்த ஸ்ருதி நீத்துவிடம் தான் புதிய ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதாக சொல்லி இன்விடேஷன் கார்ட் ஒன்றை கொடுக்கிறார். அங்குவந்த ரவிக்கும்   இன்விடேஷன் கொடுக்கிறார். 


மேலும் ரவி ஒருநாள் என்னுடைய ரெஸ்டாரண்டுக்கு நிச்சயம் வருவார் என்று ஸ்ருதி  சொல்லிச் செல்லுகின்றார். ஆனாலும் ரவி நான் உங்களுடைய ரெஸ்டாரண்டை விட்டுப் போக மாட்டேன் என்று நீத்துவுக்கு சொல்லுகிறார் .  எனினும் ரவி போனால் என்ன செய்வது என்று நீத்து யோசிக்கிறார்.

இன்னொரு பக்கம்  மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு  ராணி தனது வக்கீலை கூட்டிக் கொண்டு வருகின்றார். மேலும் மனோஜ் தன்னுடன் தப்பா நடக்க முயற்சி செய்ததாக சொல்ல, ரோகிணி கடும் கோபத்தில் அவரை அடிக்கப் போகின்றார்.  அவர்கள் போலீஸ் வர இருக்கின்றார்கள் என்று சொன்னதும்  போலீஸ் வந்தால் உண்மை தெரிந்து விடும் என்று அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதற்கு சம்மதிக்கின்றார். 

இதைத் தொடர்ந்து  கிரிஷை  வேறு ஒரு புதிய ஸ்கூலுக்கு சேர்த்து விடுகின்றார் ரோகிணி. அங்கு தனது நண்பியான மகேஸ்வரியை கார்டியனாக போடுகின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement