பிக் பாஸ் ஓடிடி புகழான நடிகை ஊர்பி ஜாவத், தான் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய ஆடை வடிவமைப்புகளை உருவாக்கி ரசிகர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இவரது டிரெஸ்ஸிங் சென்சுக்கு பின்னால் ஒரு குழுவே செயல்படுகின்றதாம்.
1997 ஆம் ஆண்டில் லக்னோவில் பிறந்த ஊர்பி தனது கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார். அதன் பின் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். அடிக்கடி மாடலிங் போட்டோ ஷூட்டும் செய்து வருகின்றார்.
சிறுவயதில் இருந்தே வித்தியாசமான உடைகளை அணிந்து கொள்வது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனாலையே கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து ஆடை தயாரித்து அதனை அணிந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றார்.. இவரை சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றார்கள்.
மேலும் சமீபத்தில் இவர் வழங்கிய பேட்டி ஒன்றில், தனது 18 வயதிலேயே லிப் பில்லரை போட்டுக் கொண்டதாகவும் அது சரியாக இல்லை என்று ஒன்பது வருடங்கள் கழித்து நீக்க முடிவு செய்ததாகவும் ஊசி போட்டு சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.
இதனால் உதடுகள் வீங்கி கன்னம் பெரிதாகி உக்கிரமாகவும் காணப்பட்டார். இது வைரலாகி பலரும் ஊர்பியை விமர்சித்து வந்தனர். அதன் பின்பு சிறு வயதில் செயற்கை அழகை தேடிச் சென்று உதட்டை பெரிதாக்கியதாகவும் இயற்கை அழகுடன் வாழ நல்ல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று லிப் பில்லரை நீக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது ஊர்பியின் செல்லப்பிராணியான பூனை அவருடைய கன்னத்தைக் கிழித்து உள்ளதாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் . அதில் இரத்த காயங்கள் காணப்பட்டதால் ரசிகர்கள் பலரும் வேதனையில் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
Listen News!