1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை ரேவதி. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் இந்த படத்தின் மூலம் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். இந்த படம் ரேவதியின் சினிமா பயணத்திற்கும் பலமான அடித்தளமாக காணப்பட்டது.
இதை தொடர்ந்து மௌன ராகம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், அஞ்சலி, மகளிர் மட்டும், வைதேகி காத்திருந்தாள், தேவர் மகன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தார். இவர் தனது நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் .
சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்ற ரேவதிக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரன் மேனனை திருமணம் செய்தார். ஆனாலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் .
இந்த நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு ரேவதி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது . அதில் அவர் தனது சினிமா வாழ்க்கை பற்றி பேசியதோடு தனது மகளைப் பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் .
அதன்படி அவர் கூறுகையில் , தற்போது நிறைய விருதுகள் கமர்ஷியலாக காணப்படுகிறது. நீங்க வந்திங்க என்றால் விருது வழங்குவோம் அப்படி என்று கூட சொல்லி இருக்கின்றார்கள் . ஆனால் எனக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைத்து விட்டது. மக்கள் என்னுடைய படத்தை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னாலே போதும் அதுவே எனக்கு சந்தோஷம்.
இப்போ எனது பொண்ணு ஆர்டில் கொஞ்சம் இன்ட்ரஸ்ட் ஆக இருக்கின்றார். அவருடைய ஆர்ட்டை வைத்து நான் கொஞ்சம் டிராவல் பண்ணியதாக தெரிவித்துள்ளார் ரேவதி. தற்போது ரேவதி வழங்கிய இந்த பேட்டி வைரலாகி வருகிறது.
Listen News!