• Jun 12 2026

மீண்டும் ரோகிணியின் வலையில் சிக்கிய மனோஜ்.. விஜயா சொன்ன முடிவு.? ஸ்ருதி சொன்ன பாயிண்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சிந்தாமணி கூறியபடியே பைனான்சியர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரோகிணிக்காக கேஸை வாபஸ் வாங்குவதாக கூறுகின்றார். மேலும் ரோகிணி பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க, முத்துவும் மீனாவும் பார்த்து இவர் என்ன ரோகிணிக்கு சர்டிபிகேட் கொடுக்கின்றார் என்று பேசிக் கொள்கின்றனர்.

அதன் பின்பு ரோகிணி தனக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டார் என்று மனோஜும் மனம் உருகிப் போகின்றார். மேலும் ரோகிணி போகும்போது, நான் உனக்காகத்தான் கடன் வாங்கினேன், ஆனால் எனக்கு அது பெரிய விஷயம் இல்லை, எனக்கு நீதான் முக்கியம், இப்போது உனக்கு நல்லது பண்ணுவது யார் என்று தெரிந்து கொள் என முத்துமீனா முன்னால் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

அதன் பின்பு வீட்டுக்கு வந்த மனோஜை வாசலில் நிற்க வைத்து விஜய் ஆரத்தி எடுத்து உள்ளே எடுக்கின்றார். இதன்போது ஸ்ருதி, இனி இப்படியான திருட்டு வேலை பண்ணாமல் இருங்க என அட்வைஸ் பண்ணுகின்றார்

மேலும் மனோஜ் அந்த நேரத்தில், முத்துமீனாவும் தனக்காக ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் வீட்டிற்காகத்தான் எல்லாம் பண்ணுகிறார்கள், ஆனால் ரோகிணிக்குத்தான் என் மீது அக்கறை இருக்கின்றது என்று மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க, விஜயா அவருடைய வாயில் அடிக்கின்றார்.

அத்துடன், இதெல்லாமே ரோகிணி உன்னிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகத்தான் செய்துள்ளார், அவருடைய 5 லட்சம் கடனை திருப்பிக் கொடு, அவளை வீட்டிற்கு கூட்டி வந்து வாழும் நினைப்பில் இருக்க வேண்டாம் என கண்டபடி திட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement