• Apr 16 2026

'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் லவ் தான் மிஸ்ஸிங்..! விமர்சித்த பெண்ணுக்கு பிரபல ஹீரோ பதிலடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள திரைப்படமாக இருந்தாலும் இது தற்போது 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

கடந்த 2006ம்  ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இதுவரையில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழ் நாட்டில் மட்டும் 17 கோடி ரூபா வசூல் கிடைக்கபெற்றுள்ளது.

இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பில் பெண் ஒருவர் அளித்த விமர்சனத்திற்கு நடிகர் அசோக் செல்வன் சரியான ரிப்ளை கொடுத்துள்ளார்.


அதாவது, மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் பற்றி தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் கூறுகையில், உண்மையாகவே படம்  நன்றாக இருந்தது. த்ரில்லிங்காக இருந்தது. ஆனால் அதில் கொஞ்சம் லவ் இருந்திருக்கலாம், பைட் இருந்திருக்கலாம். அவை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு பதிவிட்ட பெண்ணின் கருத்தை தனது எக்ஸ் தள  பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அசோக் செல்வன், ஜி பி முத்து இரண்டு கைகளையும் தூக்கி ஆசிர்வதிப்பது போல GIF டெம்ப்ளேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி  உள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள், இந்த மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement