பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் தற்போது ஒரு நில ஒப்பந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் ரூ.12.91 கோடி மதிப்புள்ள விவசாய நிலத்தை வாங்கியதாக கூறப்படும் இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சுஹானா கான், தாள் கிராமத்தில் விவசாய நிலத்தை “Deja Vu Farms Pvt Ltd” என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கியுள்ளார். இந்த நிலம் 1968-ல் விவசாயிகளுக்காக அரசு ஒதுக்கியதாகவும், அதை விவசாயிகள் தவிர வேறு யாரும் வாங்க முடியாது என சட்டம் கூறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பத்திரப்பதிவில் சுஹானா “விவசாயி” என குறிப்பிடப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அலிபாக் தேசில்தார் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. நிலம் சட்டப்படி மாற்றம் செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில், சுஹானா தனது அடுத்த திரைப்படமான “King” படத்தில் தந்தை ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படம் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Listen News!