தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் அழகு மற்றும் நடிப்புத் திறமை என்பவற்றால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் நடிகை பாவனி.
இவர், கடந்த சில ஆண்டுகளாக இரு மொழி சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பிரபலமான முகமாக வளர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு சிறிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் "நிலவோடு பேசும் மழையில்..." என்ற பாடலுக்கு அவர் அபிநயிக்கும் விதம், ரசிகர்களின் மனதை திருடியுள்ளது. பாவனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ, வெறும் 30–45 விநாடிகள் உடையது.
இந்த வீடியோ வெளியாகிய சில மணி நேரங்களுக்குள், பாவனியின் பதிவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்தன. அதோடு ரசிகர்கள் தங்கள் பாராட்டுக்களையும் கமெண்ட்ஸில் பொழிந்து வருகின்றனர்.
Listen News!