• Jun 14 2026

கருணாநிதியே கணித்திருக்க மாட்டார்.! - திமுகவின் வீழ்ச்சிக்கு விஜய் காரணமாவார் என்று..

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றியில், விஜய் தனிப்பட்ட முறையில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முழுமையான பெரும்பான்மைக்கு இன்னும் சுமார் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் சிலர் திமுக முற்றிலும் வீழ்ந்துவிட்டதாகவும், விஜய் அதை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தியுள்ளதாகவும் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த விவாதத்தை மேலும் தூண்டியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவர் பகிர்ந்துள்ள பழைய புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் நிற்க, அவரின் பின்னால் சிறுவனாக விஜய் காணப்படுகிறார். இதை பகிர்ந்த ராம் கோபால் வர்மா, “அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திமுகவை அரசியல் ரீதியாக சவால் செய்யப்போகிறார் என்று கருணாநிதி நினைத்திருக்கமாட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்வினைகளை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement