• May 16 2026

பாண்டியனை நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய கோமதி!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, அரசி அண்ணனுங்களைப் பார்த்து யாராவது அப்பாவுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம் தானே என்று கேட்கிறார். அதைக் கேட்ட சரவணன் பாண்டியனுக்கு போன் எடுத்து எங்க நிக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு பாண்டியன் உங்க அம்மா பின்னாடியே நடந்து போய்ட்டு இருக்கன் என்று சொல்லுறார். அதனை அடுத்து பாண்டியன் சரவணனை கடைக்குப் போகச் சொல்லுறார்.


அதைக் கேட்ட செந்திலும் கதிரும் கோபப்படுகிறார்கள். மறுபக்கம் பாண்டியன் கோமதியைப் பார்த்து எப்படி இந்த நடை பயணத்தை முடிக்கப்போற என்று கேட்கிறார். அதுக்கு கோமதி உங்களுக்கு கடை தானே முக்கியம்... நான் எத்தன தடவை உங்க கடைக்கு வாறன் என்று சொல்லியிருக்கன் ஆனா அப்பவெல்லாம் வரவேணாம் என்று சொல்லிட்டு உங்க மூத்த மருமகள மட்டும் கடைக்கு கூட்டிக்கொண்டு போனீங்க இப்ப என்ன ஆச்சு என்று கோபமாக கேட்கிறார்.

பின் அந்தக் கதை எல்லாம் இப்ப எதுக்கு என்று கேட்கிறார் பாண்டியன். அதனை அடுத்து கோமதி ஏலாமல் இருக்கு என்று சொன்ன உடனே பாண்டியன் அவரை நிழலாக பார்த்து உட்காரச் சொல்லுறார். பின் பாண்டியன் கோமதிக்கு தேவையான மருந்துகளின்ட பெயரை சரவணன் கிட்ட கேட்கிறார். அதனைத் தொடர்ந்து பாண்டியன் வாங்கிக் கொடுத்த மாத்திரைகள் எல்லாத்தையும் கோமதி போடுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement