• Apr 16 2026

தளபதி 68 படத்தின் டைட்டில் இது தானா?- மாஸாக வெளியாகிய சூப்பர் அப்டேட்- அடடே செமயாக இருக்குதே...

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில விஜய்யுடன் சினேகா , லைலாஉள்ளிட்ட மேலும் சிலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.


 அப்பா, மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் தளபதி 68, ஹாலிவுட் படமான ஜெமினி மேன் காப்பி என சொல்லப்படுகிறது.இந்நிலையில் தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதான் என கூறி செம மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்திற்கு GOAT என தலைப்பு வைத்துள்ளார்களாம்.G.O.A.T = Greatest Of All Time என்பதே இதன் முழு அர்த்தமாகும்.இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement