• May 17 2026

சுனைனாவுக்கு திருமணம் முடிஞ்சா? துபாய் யூடியூபர் வெளியிட்ட போட்டோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான  காதலில் விழுந்தேன், நீர் பறவை,  மாசில்லாமணி, சமர்,  தொண்டன், திருத்தணி,  வன்மம்  போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சுனைனா. 

சமீபத்தில் நடிகை சுனைனா ஆண் ஒருவரின்  கையைப் பிடித்துக் கொண்டு எடுத்த  புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது பல சர்ச்சை கருத்துக்கள் எழுதுவதற்கு காரணமானது. 

அதன்படி நடிகை சுனைனாவும் துபாயைச் சேர்ந்த  youtube பிரபலம் காலித் அல் அமேரியும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவின.  ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த youtube பிரபலம்  காலித் அல் அமேரி கடந்த ஆறாம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

இவருடைய பிறந்தநாள் பார்ட்டி கொச்சியில் நடந்தது. இதன் போது  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.  


அதில் ஒரு போட்டோவில் அவரும் நடிகை சுனைனாவும் கை கோர்த்தபடி காணப்பட்டுள்ளனர்.  மேலும் பிறந்தநாள் பார்ட்டியில் காலித் அல் அமேரி வெட்டிய கேக்கை சுனைனா தான் விசேஷமாக ஆர்டர் செய்துள்ளார்.  

இதை அடுத்து அவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக  கருத்துக்கள் பரவி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் பிரபலமான காலித் அல் அமேரியை 3.2 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.  அவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.  அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளதோடு இரண்டு மகன்கள்  இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement

Advertisement