• Apr 18 2026

மாதவிடாய் வந்தால் வெட்கப்படாமல் கொண்டாட வேண்டும்.! கோமாளி பட நடிகை ஆனந்தி பகீர்

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும், பேச்சாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவராக திகழ்பவர் RJ ஆனந்தி. குறிப்பாக கோமாளி படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட அவர், சமூகவியல் மற்றும் பெண்கள் தொடர்பான விஷயங்களில் தன்னுடைய கருத்துகளை திறம்பட பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள மாதவிடாய் குறித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பெண்களின் உடலில் இயல்பான செயல்முறையாக இருக்கும் மாதவிடாயை பற்றி அவர் விழிப்புணர்வூட்டும் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் கூறியதாவது, “மாதவிடாய் என்பது ஒரு அற்புதமான விஷயம். ஒரு காலத்தில் ‘ஐயோ இது வந்துடுச்சி’ என்று நினைத்தேன். ஆனால் அதைப் பற்றி முழுமையாக படித்து புரிந்தபிறகு, ‘இது என்ன ஒரு அதிசயம்!’ என்று உணர்ந்தேன். பெண்மையின் அருமையான ஒரு அறிவியல் அது. அதை ஒவ்வொரு பெண்களும் கொண்டாட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து பல பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. பொதுவாக, மாதவிடாய் குறித்து சமூகத்தில் இன்னும் சில இடங்களில் தயக்கம், வெட்கம் போன்ற மனநிலைகள் காணப்படுகின்றன. ஆனால், இவ்வாறான திறந்த பேச்சுகள் அந்த எண்ணங்களை மாற்ற உதவுகின்றன.

Advertisement

Advertisement