• Apr 16 2026

பரத் ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்.. 'காளிதாஸ் 2' லேட்டஸ்ட் அப்டேட் இதோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

காளிதாஸ்-2 திரைப்படம் குறித்து ரசிகர்கள் நீண்டநாளாக காத்திருந்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பரத் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் காளிதாஸ். அதில் போலீஸ் அதிகாரியாக பரத் நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ உருவாகி வருகிறது.


இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கி வருகிறார். முதல் பாகத்தைப் போலவே இந்த திரைப்படமும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தில் பரத் மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குற்றவியல் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் அவர் வலுவான கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது.

பரத் தனது நடிப்பு திறமையால் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைகளில் அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisement

Advertisement