• Apr 16 2026

க்ளெமர் போஸ் கொடுத்த அட்லீ பிரியா... வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் அட்லீ. இவர் அடுத்ததாக யாருடன் படம் பண்ண போகிறார் என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. இந்நிலையில் அட்லீ மட்டும் பிரியா அட்லீ இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.   


அட்லீ நீண்ட நாள் தோழியான பிரியா என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகனும் இருக்கிறார். விஜய் டிவியின் மூலம் பிரபலமான நடிகை பிரியா, சூர்யாவின் சிங்கம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் அட்லீ - பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கிளாமரில், ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் பிரியா. இதோ அந்த புகைப்படங்கள்..


Advertisement

Advertisement