• Apr 27 2025

ராஷ்மிகா அடுத்த ஷூட்டிங்க்கு ரெடியா? வெளியான போட்டோஸ் இதோ!.....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை  நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னடம் , தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகையாக விளங்குகின்றார். மேலும் இவருக்கு கன்னடத்தில் இருக்கும் ரசிகர்களை விட தமிழிலே அதிகளவான ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக தமிழில் வெளியான சுல்தான் , வாரிசு போன்ற படங்கள் ராஷ்மிகா மந்தனாவிற்கு மாபெரும் வெற்றியை அளித்தது.  அத்துடன் ரசிகர் பட்டாளங்கள் ராஷ்மிகாவை "expression queen" என்றும் கூறுகின்றனர்.

சமீபத்தில் நடிகை ராஷ்மிகாவிற்கு காலில் அடிபட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இவர் இனி படம் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு ஏற்ற வகையில் தற்பொழுது  ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.


அதன் மூலம்  ராஷ்மிகா அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் என அறியமுடிகிறது. அத்துடன் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கின்ற வகையிலே இந்த போட்டோ அமைந்துள்ளது.

Advertisement

Advertisement