• Apr 16 2026

சரவணனின் 'லீடர்' படத்தை பார்த்து மிரண்டு போன பிரபலங்கள்.. வெளியான முதல் விமர்சனம் இதோ

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. அரசியல் மற்றும் சமூக அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று, ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், இயக்குநருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் ‘லீடர்’ படத்தை முன்கூட்டியே பார்த்துள்ளனர். படத்தை பார்த்த இருவரும் அதன் கதைக்களம் மற்றும் திரைக்கதை அமைப்பை மிகவும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தவிர்த்து, நம்பத்தகுந்த மற்றும் இயல்பான காட்சிகளை கொண்டு கதையை உருவாக்கிய விதம் சிறப்பாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த படம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல், இசையமைப்பாளர் ஜிப்ரானும் படத்தை பார்த்து மிகவும் கவரப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இயக்குநர் துரை செந்தில்குமாரை நேரடியாக தொடர்பு கொண்டு, அரைமணி நேரத்திற்கும் மேலாக படத்தின் பல அம்சங்களைப் பற்றி பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான வெற்றிமாறன், தனுஷ், ஜிப்ரான் ஆகியோரின் பாராட்டுகள் ‘லீடர்’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இதனால், இப்படம் வெளியானதும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெறும் என படக்குழு உறுதியாக நம்புகிறது.

Advertisement

Advertisement