• Apr 23 2026

நீங்க தான் வேணும்னு நள்ளிரவில் கால் பண்ணினார்.! சாய் அபயங்கர் பற்றி மனம் திறந்த நடிகை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சினிமாவில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பாடல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டு ட்ரெண்டிங்கில் காணப்படும். அந்தப் பாடலில் ரீல்ஸ் செய்வது, டான்ஸ் ஆடுவது என சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அதன்படி சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான பவளமல்லி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்தப் பாட்டுக்கு ரீல்ஸ் போடாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பாடலும், பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகளும் பார்ப்போரை மனம் கவர வைத்திருந்தன.

அதேபோல ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான முட்டை கலக்கி பாடலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகக் காணப்பட்டது. இந்த இரண்டு பாடல்களுமே சமீப நாட்களாக ட்ரெண்டிங்காக இருந்து வருகின்றன.


இந்த நிலையில், பவளமல்லி பாடலில் பணியாற்றும் வாய்ப்பு எதிர்பாராதவிதமாகக் கிடைத்தது என நடிகை கயாது லோஹர் தெரிவித்துள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், "ஒரு நாள் நள்ளிரவு 2 மணிக்கு சாய் அபயங்கர் ஃபோன் செய்து, என்னிடம் ஒரு சூப்பர் பாடல் இருக்கிறது, நீங்கள்தான் அதில் இருக்க வேண்டும் என்று கூறினார். கண்டிப்பாக இது ஹிட் பாடலாகும் என்ற நம்பிக்கை எனக்கும் அந்தப் பாடல் கேட்ட பிறகு இருந்தது. 

மொத்தம் இரண்டு நாட்கள்தான் இந்தப் பாடலுக்கு ரிகார்சல் பார்த்தேன். எனக்கு நடனம் ரொம்பப் பிடிக்கும். நடனம் ஆடுவது ஒரு கொண்டாட்டம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement