• May 16 2026

ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.! என்ன தெரியுமா? படக்குழு வெளியிட்ட அப்டேட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

HBO தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஹாரி பாட்டர் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்த பிரபல கதையை மீண்டும் திரை வடிவில் காணும் ஆவல் ரசிகர்களிடையே நீண்ட காலமாக இருந்தது. தற்போது வெளியான இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


போஸ்டரில், கதையின் மையக் கதாபாத்திரமான ஹாரி பாட்டரின் புதிய லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லுக் சிறிது வித்தியாசமாகவும், புத்தகங்களுக்கு நெருக்கமான தோற்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த தொடரின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஹாரி பாட்டர் தொடரின் மொத்த 7 புத்தகங்களும் தனித்தனி சீசன்களாக உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம், முன்பு திரைப்படங்களில் இடம் பெறாத பல முக்கியமான பகுதிகள் மற்றும் கதாபாத்திர வளர்ச்சிகள் விரிவாக காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கும் ட்ரெய்லர் இன்று (மார்ச் 25) வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement