• Jun 12 2026

மீண்டும் குடும்பத்துக்காக களம் இறங்கிய ஜார்ஜ் குட்டி.! வெளியானது த்ரிஷ்யம் 3 டீசர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் மிகச் சிறந்த திரில்லர் தொடராக திகழும் த்ரிஷ்யம் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறது. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவான இந்தப் படம், தனது முதல் இரண்டு பாகங்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று, இந்திய சினிமாவில் தனித்த அடையாளத்தை உருவாக்கியது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘த்ரிஷ்யம் 3’ உருவாகியுள்ளது. முந்தைய பாகங்களைப் போலவே, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சுற்றி நடைபெறும் மர்மம், பதட்டம், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை இந்தப் படத்தின் மையமாக இருக்கின்றன. குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் ஜார்ஜ்குட்டியின் பயணம், இந்தப் பாகத்தில் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால், தொடர்ச்சியான கதைக்கள அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கிறது.


மே 21ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஓடிடி உரிமையைச் சுற்றியும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெல்லி உயர் நீதிமன்றம், அமேசான் பிரைம் வீடியோவைத் தவிர வேறு நிறுவனங்களுக்கு ஓடிடி உரிமம் விற்க தற்காலிகத் தடை விதித்துள்ளது .

இந்நிலையில்,  ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த காட்சிகளிலேயே பரபரப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர், மீண்டும் ஒரு முறை ஜார்ஜ்குட்டியின் ரகசிய உலகுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லத் தயாராக இருப்பதை உணர்த்துகிறது.

Advertisement

Advertisement